இராமநாதபுரம் மாவட்டம் கிராமபுற இளைஞர்கள் பங்கு பெற்ற கைப்பந்து போட்டி, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கோவை ஈஷா யோகாமையம் சார்பில் கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கைப்பந்து போட்டி.
கிராமப்புற இளைஞர்களை நல் வழிப்படுத்தும் நோக்கத்துடன் ஈஷா யோக மையம் சார்பில் கைப்பந்து, கபடி, எறி பந்து போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இராமநாதபுரத்தில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்டத்தில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டிக்கு சித்தார்கோட்டை, ஏர்வாடி, ஒப்பிலான்,திருப்பாலைக்குடி அணிகள் தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் திருப்பாலைக்குடி அணியும் ஒப்பிலான் அணியும் மோதியதில் ஒப்பிலான் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு
இராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் மற்றும் திமுக மீனவரணி மாநில செயலாளர் திரு A.இரவிச்சந்திர ராமவன்னி ,இராமநாதபுரம் மாவட்ட DSO திரு M .தினேஷ்,மற்றும் கைப்பந்தாட்ட நடுவர் திரு.இரமேஸ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்,
முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.9.000 , இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.6.000, மூன்றாவது அணிக்கு ரூ.3.000 நான்காவது அணிக்கு ரூ.2000 ம் பரிசாக வழங்கப்பட்டது.
முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் மதுரையில் வரும் டிசம்பர் 08ம் தேதி நடைபெறும் மாவட்டங்களுக்கிடையேயான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரும் அணிகள் டிசம்பர் 28 அன்று கோவை ஈஷாயோகாமையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படஉள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட ஈஷா தன்னார்வதொண்டர்கள் இரண்டு நாளும் இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment