புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பாப்பா நேந்தல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு இதற்கான சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து ரெண்டு நாட்களாக இரண்டாம் காலயாக பூஜை நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பூசிக்கப்பட்ட புனித நீரோடு கடும் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது கடம் புறப்பாடானது கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் ஏராளமான கலந்து கொண்டுகோபுர தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது மீமிசல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment