புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரக்கூடியது" ஓம் நமச்சிவாயா" அறக்கட்டளை ஆகும்.
இதன் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் உரிய நபர்களை முறையாக கண்டறிந்து அவர்களுக்கான உதவிகளை தடையின்றி செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டையில் உள்ள நேசக்கரம் முதியோ இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை குடிசை மாற்று வாரிய பகுதியில் கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் வறுமை நிலையில் வசித்து வருபவர் ரூபாவதி ஆவார்.
இவரது வறுமை நிலையை அறிந்து அவருக்கு நேரடியாக சென்று அவரது வாழ்வாதார உயர்விற்காக தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அப்பொழுது அப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை மூலமாக வழங்கப்படும் இந்த பொதுச் சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment