கணபதிபுரம் கிணற்றில் உயிருக்கு போராடிய நாய் குட்டிகளை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 23 April 2024

கணபதிபுரம் கிணற்றில் உயிருக்கு போராடிய நாய் குட்டிகளை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்.


புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, கணபதி புரத்தில் கிணற்றில் நாய் குட்டிகள் நான்கு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக சென்னை தீ கட்டுபாட்டு அறையின் வாயிலாக அவ்வூரைச் சேர்ந்த ராஜ்குமார் த/பெ கணேசன் என்பவர் உதவிக் கோரினார். தகவல் பெறப்பட்டதும் கந்தர்வகோட்டை தீயணைப்பு மீட்பு பணிவீரர்கள் நிலைய பொறுப்பு அலுவலர் த. சிவகுமார் தலமையில் விரைந்து சென்று பார்த்தபோது 40 அடி ஆழம் கொண்ட தண்ணீர் அற்ற கிணற்றில் நான்கு பச்சிளம் நாய் குட்டிகளை அதன்  தாயிடம் இருந்து பிரித்து சென்று கிணற்றில் வீசப்பட்டு இருந்தது உடன் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி நாய்குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு உதவிக்கு அழைத்த நபரிடம் ஒப்படைக்கப்பட்டு  அப்பகுதி மக்களிடம் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து கண்டித்து தீயணைப்பு வீரர்கள் நிலையம் திரும்பினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad