புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக கலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தன்னார்வலர் ராதிகா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஹமதுல்லா உலக கலை தினம் குறித்து பேசும்போது கலை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் படைப்பாற்றல், புதுமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை வளர்க்கிறது மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வத்தையும் உரையாடலையும் ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கலைஞர்கள் மற்றும் கலை சுதந்திரம் ஊக்குவிக்கப்படும் மற்றும் பாதுகாக்கப்படும் சூழல்களை நாம் தொடர்ந்து ஆதரித்தால், இவை கலைக்கு எப்போதுமே இருக்கும் குணங்கள். இந்த வழியில், கலையின் வளர்ச்சியை மேம்படுத்துவது சுதந்திரமான மற்றும் அமைதியான உலகத்தை அடைவதற்கான நமது வழிமுறைகளை மேலும் மேம்படுத்துகிறது. மேலும்
மாணவர்கள் காகிதத்தில் பல்வேறு வகையான கலைப் பொருட்களை செய்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் புவனேஸ்வரி , காயத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment