நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 4 March 2024

நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


இந்திய அரசு புதுக்கோட்டை  மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் வேப்பங்குடி புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார். புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி  செயலாளர் ராஜாராம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன்  ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துவக்க விழாவில் தமிழ்ச் செம்மல் கவிஞர்  தங்கம் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு விழாவினைத் துவக்கி வைத்து "பெண்கள் மேம்பாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் "பெண்கள் யானையைப் போல் வலிமை மிக்கவர்கள். ஆனாலும் வாழ்நாள் முழுவதும் ஆண்கள் என்ற பாகனுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்ற ஒரு மனப்பான்மையைத்தான்  நம் சமூகம் அவர்கள் மீது திணித்து வைத்துள்ளது எனவும் தாயாக சகோதரியாக மனைவியாக உறவினர்களாக நல்ல நட்பாக  நம்முடனேயே வாழும் பெண்களை நாம் அனைவரும் போற்ற வேண்டும் எனவும், பிறந்த வீட்டில் வளரும் பெண் புகுந்த வீட்டில் தேய்கிறாள் எனும் நிலை நம் சமூகத்திலிருந்து மறைய வேண்டும் எனவும் எடுத்துக் கூறினார். 


இன்றைய நமது இளைய சமுதாயம் இந்த நல்ல மாற்றத்தினை நம் சமூகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் அவர்கள் சிறு தானியங்களின் சிறப்பியல்புகள் எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.


விழாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் நேரு யுவ கேந்திரா இளையோர் பங்கேற்ற மாதிரி இளையோர் பாராளுமன்றம் நடைபெற்றது ஒரு மாணவர் சபாநாயகராக பங்கேற்க ஆளும் தரப்பாகவும் எதிர்த்தரப்பாகவும் 12 இளையோர் பங்கேற்று பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்த சிறப்புக்களையும் அவற்றின் மீதான தரமான விமர்சனங்களையும் எடுத்துக் கூறி விவாதித்தனர் தொடர்ந்து மாமன்னர் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் முனைவர் கணேசன் மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் சதாசிவம் தபால் துறை கண்காணிப்பாளர் பொன் முருகேசன் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் வீரமுத்து அசாம் மாநிலத்தைச் சார்ந்த வேளாண் விஞ்ஞானி மிலன் மற்றும் புத்தாஸ் மார்சியல் ஆர்ட்ஸ் அசோஷியேசன் நிறுவனர் சேது கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா அவர்கள் இளையோர் மாதிரி பாராளுமன்றத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளையோர் அனைவருக்கும் நேரு யுவகேந்திரா சார்பில் நினைவு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி அவர்களை வாழ்த்திப் பாராட்டினார் நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் மற்றும் நேரு யுவகேந்திராவை சார்ந்த இளையோர் சுமார் 750 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் சாந்தி அவர்கள் வரவேற்றார்.


நிறைவாக நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் முனைவர் நமச்சிவாயம் அனைவருக்கும் நன்றி கூறினார் நிகழ்ச்சியை புஷ்கரம் வேளாண் கல்லூரி அலுவலர்களுடன் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர்கள் லாவண்யா ஸ்வர்ணா மற்றும் ரம்யா ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad