புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை தாலுகா பெருங்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சாமிநாதன் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துலட்சுமி சாமி அய்யா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VN பாலு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அசோக், ஒன்றிய அவை தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் சரவணன் மற்றும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வார்டு உறுப்பினர் மனோகர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment