புதுக்கோட்டை திலகர் திடல் ஏவிசிசி கல்வி குழுமங்களின் 48 வது ஆண்டு நிறைவு விழா லேணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது .ஏவிசிசி கல்வி குழுமங்களின் தலைவரும் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனருமான ஏவிசிசி கணேசன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் திருமதி மல்லிகா கணேசன் முன்னிலை வகித்தார்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி முதல்வர் டாக்டர் புவனேஸ்வரி, வட்டார கல்விவள மேற்பார்வையாளர் பிரான்சி டயானா அரசு உயர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் தேவிகா அகஸ்தியா பாண்டிச்செல்வி கவிதா விஜி பவித்ரா மகாலட்சுமி அமுதாஜென்னி விஜயலட்சுமி ரேவதி ஐஸ்வர்யா ராஜேஷ்காந்தி துளசி ரம்யா கிருத்திகா மற்றும் பணியாளர்கள் சரோஜினி கோகிலா ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இரவுநேர சிற்றுண்டியுடன் மற்றும் போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment