கறம்பக்குடியில் பத்திர பதிவு செய்ய மறுத்த சாா்பதிவாளரை கண்டித்து சாலைமறியல் போராட்டம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 29 February 2024

கறம்பக்குடியில் பத்திர பதிவு செய்ய மறுத்த சாா்பதிவாளரை கண்டித்து சாலைமறியல் போராட்டம்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இப்பகுதியை சேர்ந்தவர்கள் இடம் வாங்க, விற்க, சங்க பதிவு, திருமண பதிவு, பிறப்பு இறப்பு சான்று பதிவு, வில்லங்க சான்று, உள்ளிட்ட பல்வேறு பதிவு நடைமுறைகளுக்கு இந்த அலுவலகம் வருகின்றனர். தினமும் 20 க்கும் மேற்ப்பட்ட பத்திர பதிவுகள் இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 10 க்கும் மேற்ப்பட்ட ஆவண எழுத்தர்களும் உள்ளனர்.

இந்நிலையில் சமீப காலமாக பத்திர பதிவிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக கூடுதலாக பொதுமக்களிடம் வசூல் செய்வதாகவும், ஆவண எழுத்தர்கள், இடை தரகர்கள், மூலம் பேக்கேஸ் முறையில் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு ழுந்தது. இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.


சில அமைப்புகளின் சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மாநில அளவிலான அதிகாரிகள் நேரடியாக  விசாரனை நடத்தியதோடு 2 தடவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையும் நடந்தது. இந்நிலையில்  கறம்பக்குடி அருகே உள்ள குரும்பி வயலை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் மற்றும் 6 மகள்கள் அவர்களது தந்தை இறந்து விட்ட நிலையில் உரிய இறப்பு மற்றும் வாரிசு சான்றுகளை பெற்று கருப்பையா பெயரில் உள்ள சொத்தை விற்று கிரய பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர். ஆனால் கிரைய பத்திரத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கருப்பையாவின் மகன், மகள்கள் மற்றும் உறவினர்கள் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad