அறந்தாங்கியில் மாட்டுவண்டி பந்தயம் சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 10 February 2024

அறந்தாங்கியில் மாட்டுவண்டி பந்தயம் சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.


அறந்தாங்கி அருகே தினையாகுடி, திருநெல்லி வயல் கிராமத்தார்கள் மற்றும் வேங்கை பாய்ஸ் இளைஞர்கள் நடத்தியமுதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம்சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தினையா குடி என்ற கிராமத்தில் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைபந்தயம் நடைபெற்றது பந்தயத்தில் மூன்று பிரிவுகளாக பெரிய மாடு (14).நடு மாடு (20).சின்ன மாடு (21)என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 55மாட்டு வண்டிகள் இதில் கலந்துகொண்டது இதில் புதுக்கோட்டை ராமநாதபுரம் தஞ்சாவூர் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர்.


இதில் வெற்றி பெற்று மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணமும் கேடயமும் வழங்கப்பட்டது இந்த பந்தய விழாவில் சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலையில் இருபுறமும் பந்தய ரசிகர்கள் பந்தயத்தை கண்டு களித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad