இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கந்தரவக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும் பொழுது கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்குவதற்காக தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி மையம் விராலிப்பட்டியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக வருகை தரும் மாணவ, மாணவிகளை பாராட்டுகிறோம். அடிப்படை திறன்களான வாசிப்பு பயிற்சி, கணித அடிப்படை திறன்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், ஆங்கில வாசிப்பு பயிற்சி உள்ளிட்டவை மையத்தில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மையத்திற்கு தொடர்ச்சியாக வருகை தராத மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு மையத்திற்கு தொடர்ச்சியாக வருகை தர வேண்டும் எனவும், தன்னார்வலர்கள் பெற்றோர்களை சந்தித்து இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெறக்கூடிய கற்றல், கற்பித்தல் முறைகளை பெற்றோர்களுடன் கலந்துரையாடல் வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய மைய செயல்பாடுகளை கலந்துரையாடல் செய்ய வேண்டும் எனவும், வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து குறைதீர் கற்பித்தல் உள்ளிட்ட கற்பித்தல் முறைகளை ஆசிரியர்களுடன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும், மாணவர்களுடைய வருகை பதிவை இல்லம் தேடி கல்வி மைய செயலியில் பதிவேற்ற வேண்டும் எனவும்,மையத்தில் சிறப்பு தினங்களை கொண்டாட வேண்டும் எனவும், ஒவ்வொரு மாணவர்களின் வாசிப்பு திறனை அடைவு அட்டையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், தன்னார்வலர்கள் வழங்கப்பட்டுள்ள கற்பித்தல் உபகரணங்களை மாணவர்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், இதுவரை அளிக்கப்பட்டுள்ள பயிற்சிகளை பயன்படுத்தி தன்னார்வலர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும்,பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், அருகில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களையும் இணைத்து கற்பிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சியை அளிக்க பள்ளி நூலக புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ராமலிங்கம், லெட்சுமி, மத்தியாஸ், லெட்சுமி, கெளசல்யா இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் சுவேத்ரா, ஷாலினி ,விஜயம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment