கந்தர்வக்கோட்டை அருகே சூரிய மண்டலம் குறித்த ஓவிய போட்டி போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 21 February 2024

கந்தர்வக்கோட்டை அருகே சூரிய மண்டலம் குறித்த ஓவிய போட்டி போட்டி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெத்துவாசல் பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கோபர் நிக்கஸ் பிறந்த நாளை முன்னிட்டு சூரிய மண்டலம் குறித்த ஓவிய போட்டி நடைபெற்றது போட்டிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் சத்யா செய்திருந்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கோபர் நிக்கஸ் குறித்து பேசும்போது, உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ்  பிறந்த தினம் இன்று. போலந்து நாட்டின் தோர்ன் நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் (1473) பிறந்தார். தந்தை வணி கர். 10 வயதில் தந்தையை இழந்து மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலையில் படித்தபோது, நிகோலஸ் கோபர் நிகஸ் என்று மாற்றிக்கொண்டார். 


கிரேக்க கவிதைகளை லத்தீனில் மொழிபெயர்த்தார். 18 வயதில் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் வானியல், கணிதம், தத்துவம், புவியியல், அறிவியல் பயின்றார். இங்கு இவரது ஆசிரியர் ஆல்பர்ட் ப்ரட்ஜூஸ்கியின் மீதான தாக்கத்தால் வானியலில் ஆர்வம் பிறந்தது. அதுகுறித்து ஏராளமான நூல்களை படித்தார்.


மீண்டும் இத்தாலி சென்று, வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 1514-ல் தான் எழுதிய கையெழுத்துப் பிரதி நூலை பல்வேறு வானியலாளர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சி கள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கணித அடிப்படையில் இந்த ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டார். 7 பகுதிகள் கொண்ட சுழற்சிக் கோட்பாட்டை உருவாக்கினார். அனைத்து கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்பதுதான் அதில் முக்கியமானது என்று பேசினார்.


மாணவர்கள் சூரிய மண்டலம் குறித்து ஓவிய போட்டி வழங்கினர் சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad