வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 21 February 2024

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் மங்களாகோயில் பரமசிவம் தலைமை வகித்தார்.

தலைமை ஆசிரியர் பொறுப்பு முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூபதி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமையா, ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவி செண்பகம், துணைத் தலைவர் சங்கீதா உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.


சிறப்பு அழைப்பாளராக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிசுடர் கவிதைப்பித்தன் கலந்துகொண்டு கடந்த ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை எடுத்தவர்கள், 100 க்கு 100 எடுத்த மாணவர்கள், இப்பள்ளியில் பயின்று அரசுப்பணியாளர் களாக மருத்துவம், ஆசிரியர், வங்கி, காவல் துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்களுக்கும், கலை இலக்கிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ், கேடயம், பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கி மேடையின் எதிரே இருப்பவர்கள் வருங்காலத்தில் மேடைக்கு வரவேண்டும் என்பதற்காக நடத்ப்படும் நிகழ்ச்சியே இதுபோன்ற ஆண்டுவிழாக்கள் என்றும் மாணவர்கள் தமிழக அரசு வழங்கும் கல்வி வசதிகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


முன்னதாக ஆண்டறிக்கையை கணித ஆசிரியர் சரவணமூர்த்தி வாசித்தார், இந்நிகழ்வில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மங்கனூர் ஆ.மணிகண்டன், கு.துரையரசன், பேராசிரியர் ரெ.பிச்சைமுத்து, த.வேலாயுதம், எம்.சின்னராஜா அ.ரகமதுல்லா, சண்முகம், கணேசன், நிர்மல் ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல் நடனம் நாடகம் பேச்சு உள்ளிட்ட கலை இலக்கிய நிகழ்ச்சிகளை மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தது கலந்துகொண்ட பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை அனைவரும் கைதட்டி ரசித்தனர்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பரிமளா, நிர்மலா, பாரதிராஜா, சக்தி மணிகண்டன், ஹாஜியா பேகம், ரஷ்யா உள்ளிட்டோர் மற்றும் பெற்றோர்கள்   செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை ஆங்கில ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் தொகுத்து வழங்கினார். நிறைவாக தமிழ் ஆசிரியர் க.சத்தியபாமா அனைவருக்கும் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad