தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 22 February 2024

தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்புணவாசல் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புணவாசல் அருகே புத்தாம்பூர் காடத்திவயல் பறையத்தூர் இடையூர் வெட்டிவயல் எட்டிசேரி உள்ளிட்ட பகுதியில் விளைந்த நெல்களை அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்காமல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் சுமார் 5000 க்கு மேற்பட்ட முட்டைகள் தேங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை இப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைகோடி பகுதி இந்த பகுதியில் வானம் பார்த்த பூமி மழை பெய்தால் மட்டுமே தான் விவசாயம் உள்ள நிலையில் இந்த ஆண்டு ஓரளவு பெய்த மழையில் விளைந்த நெல்களை தற்போது அறுவடை செய்து நான்கு நாட்களாக டிராக்டர் ஏற்றி வைத்துக்கொண்டு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரியிடம் கூறிய போது அதிகாரி அலட்சியப் போக்கால் இப்பகுதியில் நெல்களுடன் டிராக்டர் நிற்பதால் விவசாயிகள் வேதனை மேலும் தற்போது கோடை மழை தொடங்கி விட்டால் நெல்கள் முளைத்து விடும் அவல நிலையில் உள்ளது.


இதனை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் மேலும் அதிகாரிகளின் இது போன்ற செயலால் தமிழக அரசு தற்போது நன்றாக செயல்பட்டு வரும் நிலையில் அரசுக்கு அவபேரை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குற்றம் சட்டி உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியவுடன் விவசாயிகள் தற்சமயம் சாலையில் இருந்து கலைந்து சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad