முள்ளிக்காப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 24 February 2024

முள்ளிக்காப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்  முள்ளிக்காப்பட்டி  நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோக்கு தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி ரம்யா உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை அமராவதி அனைவரையும் வரவேற்றார். ஆண்டறிக்கையை பள்ளியின் கணித ஆசிரியர் தங்கராசு வாசித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிப்பிரியா அய்யாத்துரை மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் துரையரசன், சண்முகம்,  வேலாயுதம், சின்னராஜா, ரவி, இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  ரகமதுல்லா எழுத்தாளர் அண்டனூர் சுரா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.


நெப்புகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், பெற்றோர்கள் சசிகுமார், கைலாசம், முனியாண்டி ஏற்பாடுகள் செய்திருந்தனர். நிகழ்வுகளை ஆங்கில ஆசிரியர் ஆனந்தராஜும், கலை நிகழ்ச்சிகளை அறிவியல் ஆசிரியை விஜி டெல்பின் ரோசும் தொகுத்து வழங்கினர். மாணவர்களின் ஆடல், பாடல்,  நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆசிரியை பாப்பா மற்றும் அனுசுதா ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தனர்.


இவ்விழாவில் ஒன்றிய குழு  உறுப்பினர் பாரதிப்பிரியா அய்யாத்துரை, பள்ளி மேலான்மைக்குழு தலைவி ரம்யா ஆகியோர் தலா 1000 ரூபாயும்  மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பாக புரவலர் நிதியாக ரூபாய் 2500 ஐ திவ்யா, சிந்துஜா, சின்னபொண்ணு ஆகியோரும்  வழங்கினர். இல்லம் தேடிக் கல்வித் திட்ட  தன்னார்வலர்கள் அணுசுதா, மாரியம்மாள், சங்கீதா, சிந்துஜா ஆகியோர் ரூபாய் 1000 புரவலர் நிதியாக வழங்கினர்.


முன்னதாக கந்தர்வகோட்டை வாட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி வருகைபுரிந்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் முன்னாள் ஆசிரியர்கள் விசுவநாதன், சரசம், சிந்தியா, பகட்டுவான்பட்டி தலைமை ஆசிரியை ராகினி மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக இப்பள்ளியின் ஆசிரியர் ஆனந்தராஜ்  நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad