புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் பாக்யராஜ் அவர்கள் நடுநிலைப் பள்ளிக்கு மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். இதே போல் ஞாயிறு தினமான இன்றும் விடுமுறை என்று கூட பார்க்காமல் பள்ளிக்குச் சென்று சுவற்றில் சர்.சி.ராமன் அவர்களை ஓவியம் வரைந்துள்ளது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் மன்றம், சர்.சி.வி ராமன் அறிவியல் மன்றம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார். எதிர்வரும் செவ்வாய்கிழமை தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment