அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 16 February 2024

அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரியாணிபட்டியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் ரத்னவேல் கார்த்திக் மழவராயர் முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ராசாத்தி ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுநிதி, பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவர் கலியரசு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுதா சுந்தரம், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரியாணிப்பட்டி கிராம பொதுமக்களும், பெற்றோர்களும் பள்ளி கல்விச் சீர் வழங்கி சிறப்பித்தார்கள். தலைமை ஆசிரியர் கற்பகம் அனைவரையும் வரவேற்றார்.


இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் வேலாயுதம், சின்னராஜா ரகமதுல்லா, தவச்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வினை மருங்கூரணி  தலைமை ஆசிரியர் துரையரசன் தொகுத்து வழங்கினார். முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. மாணவர்களின்  ஆடல் ,பாடல் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை  சிறப்பாக செய்திருந்தனர்.


இவ்விழா விற்கான  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நாராயணசாமி, வெங்கட சுப்பிரமணியன், கனிமொழி கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்தர்களும், ஊர் பொதுமக்கள், கந்தர்வகோட்டை ஒன்றியத்தைசார்ந்த தலைமை ஆசிரியர் பெருமக்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad