அறந்தாங்கி அருகே ஒரே நேரத்தில் ஐந்து கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 15 February 2024

அறந்தாங்கி அருகே ஒரே நேரத்தில் ஐந்து கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஆவுடையார் கோவில் தாலுகாவில் உள்ள பொன் சிறுவரைகிராமத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஆவுடையார் கோவில் தாலுகா பொன் சிறுவரை  கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, மற்றும் பூர்ணா புஷ்ப கலா சமேத ஐயனார் அற்புத விநாயகர், பெரிய கருப்பர், பாலையடி காளியம்மன், ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கிராம நாட்டார்களும் கிராமத்தினரும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.


இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 13ஆம் தேதி செவ்வாய்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மூன்று அதனை தொடர்ந்து 3 நாட்களாக மூன்று கால யாகபூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நான்காம் கால யாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்ற பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்தது அதனை தொடர்ந்து மணிகண்டன் பட்டாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கும்பாபிஷேக விழாவில்  பொன் சிறுவரை மற்றும் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோபுர தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad