புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் அதிகாலையில் நடை பயணம் மேற்கொண்டு திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் வியாபாரிகள் அனைவரையும் அவர்களது இல்லங்களில் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா அவர்களின் சமூகப் பணி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.
இன்றைய 10.2.2024 அதிகாலை நடைப்பயிற்சி சுற்றுப்பயணம் வார்டு எண் 5 ல் பொதுமக்களை அவர்களது இல்லங்களில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அரசின் பல்வேறு திட்டங்களை விளிம்பு நிலை மக்களுக்கு சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் வை முத்துராஜா உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் வட்டச் செயலாளர் நாகராஜ் நகர் மன்ற உறுப்பினர் அடைக்கலம் வட்ட பிரதிநிதி அடைக்கலம் கழக உடன்பிறப்புகள் கார்த்தி வசந்த் நந்தகுமார் பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment