கீரனூர் அறம் அரிமா சங்க சாசன தலைவர் மகேஷ்கலியநாதன் தலைமையேற்று நடத்தினார்.கீரனூர் வணிகர் சங்க தலைவர் வீராசாமி, ரத்ததான மாவட்ட தலைவர் பழனிவேலு, யோகா மாவட்ட தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.ரத்ததானம் செய்வது இயற்கையாக புதிய ரத்தம் உடலில் ஏற்படுவதற்கு சமம் என்றும், இரத்ததானம் செய்வது பிறர் நலம் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலம் காப்பதற்கும்,தன் நலம் மேம்படுவதற்கு உதவும் என முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் ரத்த வங்கி மருத்துவர் சரவணன் மண்டல தலைவர் சிதம்பரம்,வட்டார தலைவர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிவேலன், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, வணிகர் சங்க செயலாளர் ஷேக்காதர் இப்ராஹிம், வணிகர் சங்க பொருளாளர் முருகேசன், வணிகர் சங்க துணை தலைவர் பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முகாமில் காவல் ஆய்வாளர் சரவணன், தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் பின்னர் கீரனூர் அறம் அரிமா சங்க செயலாளர் ஜீவானந்தம் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment