புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா,மேலைச்சிவபுரி கணேசனர் கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பும் இந்திய தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் கல்லூரி சன்மார்க்க சபை அரங்கில் நடைபெற்றது.
யூத் ரெட் கிராஸ் அமைப்பின் திட்ட அலுவலர் முனைவர் சி.முடியரசன் வரவேற்புரை நிகழ்த்தினார் விழாவிற்கு கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர் வே.அ.பழனியப்பன் தலைமை தாங்கினார். பொன்னமராவதி வட்டாட்சியர் திரு க.பிரகாஷ் புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து தேர்தல் கல்வியறிவுக் குழுவைத் தொடங்கி வைத்து கல்லூரி வளாகத் தூதுவராக முதுகலை மாணவர் ஜெ.சுந்தரேசனை நியமித்தார். பொன்னமராவதி துணை வட்டாட்சியர் (தேர்தல்) திரு முகமது இஸ்மாயில் அவர்கள் கருத்தரங்கத்தின் நோக்க உரை வழங்கினார்.
நிகழ்வில் பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் திருமதி சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் திருமதி விஜயா, வணிகவியல் துறை தலைவர் முகமது இப்ராஹிம் மூசா, உடற்கல்வி இயக்குனர் மா.சுரேஷ்குமார் ஆகியோர் புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பேராசிரியர்கள் பொன்.கதிரேசன், பெரி.அழகம்மை, மா.தமிழ்ச்செல்வி வே.நித்தியகல்யாணி, மு.சுபர்னா மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் எஸ்.சூர்யா அவர்கள் நன்றி கூறினார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment