புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா ஆலோசனையின்படி பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வலையபட்டி அடைக்கன் ஊரணியில் நீர்நிலைகள், இயற்கை இடர்பாடுகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித்தவித்தால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது குறித்த போலி ஒத்திகை விழிப்புணர்வை தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காண்பித்தனர்.
மேலும் பொதுமக்களிடையே இடையே பேசிய தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தீ விபத்து நிகழும் போது முன் தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க வேண்டும், தீ விபத்து மற்றும் பாம்பு, மாடு, ஆடு, ஏதேனும் விபத்து என்றால் 101 எண்கள் மூலம் தீ கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நிலை அலுவலர் மணிகண்டன் விளக்கி கூறினார்.இதில் சமூக நல அமைப்பினர், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு தீயணைப்பு வீரர்களின் செயல்களை பாராட்டி ஊக்குவித்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment