திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 16 September 2023

திருமயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி துவக்கி வைத்தார்.


இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் கூடிய அடையாள அட்டை வழங்குதல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பதிவு செய்தல், மறுவாழ்வு உதவிகள் வழங்கிட பரிந்துரை செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டி ஆகியவை வழங்கப்பட்டது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை அளித்தார்.


இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பரிசோதனை செய்து அதற்கான அடையாள அட்டயும் உடனே வழங்கப்பட்டது. இதில் திருமயம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் 1 நபருக்கு செல் போனும், ஆக மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 500 அதுக்கு நான் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையைகளையும் வழங்கினார், மேலும் இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர், மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர், முருகேசன், திருமயம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், அழகு, அரசு அலுவலர்கள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு உலகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மூடநீக்கியல் வல்லுநர் திரு ஜெகன் முருகன் அவர்கள் நன்றி உரை கூறினார்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad