திருக்களம்பூர் ஊராட்சி, குமாரப்பட்டி கிராமத்தில் டெங்கு/ தொற்றா நோய்கள் சுகாதார விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 16 September 2023

திருக்களம்பூர் ஊராட்சி, குமாரப்பட்டி கிராமத்தில் டெங்கு/ தொற்றா நோய்கள் சுகாதார விழிப்புணர்வு முகாம்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் திருக்களம்பூர் ஊராட்சி, குமாரபட்டிகிராமத்தில் பொதுமக்களுக்கு மேலைச்சிவபுரிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக,டெங்கு காய்ச்சல் குறித்த விரிவான விழிப்புணர்வும் ஏடிஸ் கொசுப் புழுவை காண்பித்து நேரடி செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

 அதனை தொடர்ந்து தொற்றா நோய்களான சர்க்கரை நோய்_ இரத்த அழுத்த நோய் மற்றும் கர்ப்பிணி பெண்கள் 12 வாரத்திற்க்குள்கர்ப்பத்தை பதிவு செய்தல் அதன் வழியாக பிறப்புச் சான்று பெறுதல்/ தொற்றும்_தொற்றா நோய்களுக்காக மாத்திரை வாங்குவோர் இடைநிற்க்காமல் தொடர்ந்து வாங்கி உட்கொள்ள வேண்டிய அவசியம் / ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்/முன்தடுப்பு முறைகள் / மருத்துவமனை சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றியும் நல்ல தண்ணீரை கொசுக்கள்புகா வண்ணம் மூடி வைத்தல்/ தொட்டியை சுத்தம் செய்தல்/ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நா .உத்தமன் விரிவாக விளக்கமளித்தார், சு. ஆ பிரேம்குமார் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad