புதுக்கோட்டையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 15 September 2023

புதுக்கோட்டையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்.


பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள்  ஆகியவற்றை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பெற்றன.

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டிகள் புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடத்தப்பெற்றன. முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000என பரிசுக்காசோலைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகந்தி அவர்களால் வழங்கப்பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் முதல்வர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.


பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி வீ. ஜெயலெட்சுமி முதல் பரிசும், அக்ஸீலியம் கலை அறிவியல் கல்லூரி மாணவி ஜெ. யமுனா இரண்டாம் பரிசும், ஆலங்குடி, அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவன் சே. ராமவிஷ்ணு மூன்றாம் பரிசும் பெற்றனர்.  


தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி இரா. பபிதா முதல் பரிசும், புதுக்கோட்டை, அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் மா. ஆகாஷ் இரண்டாம் பரிசும், மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி பா. காயத்ரி மூன்றாம் பரிசும் பெற்றனர்.  


பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறை தலைவர் திரு. நெ.இரா. சந்திரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சார்ந்த பணிநிறைவுபெற்ற தமிழாசிரியர்கள் திரு. கும. திருப்பதி, திரு. காந்திநாதன், திரு. பார்த்தசாரதி, திரு. சிவகுருநாதன், திரு. அழகு நிலவன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஜ. சபீர்பானு அவர்கள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பரிசளிப்பு விழாவின் போது தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வே. முத்தமிழ், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad