திருக்களம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் முத்தமிழ்ப்பாசறை, அரசு உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 4 September 2023

திருக்களம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் முத்தமிழ்ப்பாசறை, அரசு உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் முத்தமிழ்பாசறை இணைந்து தமிழ் இலக்கிய விழா நடத்தினர். திருக்களம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவிற்கு முத்தமிழ்ப்பாசறை தலைவரும், ஆசிரியருமான பாலமுரளி தலைமையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) சிவக்குமார் வரவேற்புரையில் அறங்காவலர்கள் கருப்பையா, அரிமா சங்க முன்னாள் தலைவரும், பணி நிறைவு தலைமையாசிரியருமான சந்திரன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், ஆசிரியருமான சி.சு.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரையில் திருக்களம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் இராமாயிமணி, துணைத்தலைவர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நந்தினி பாரி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அழ.ஜீவானந்தம், அறங்காவலர் குழு பொருளாளர் பெ.சதாசிவம், முத்தமிழ்ப்பாசறை செயலாளர் இராம.வீரப்பன், முத்தமிழ்ப்பாசறை பொருளாளர் ச.வெங்கடேசகுப்தா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. 

இவ்விழாவில் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற தலைப்பில் பாசறை உறுப்பினர், ஆசிரியர் பயிற்றுனர் சி.பசுபதி சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து அறங்காவலர் குழுத்தலைவர் மாணிக்கவேலு, முன்னாள் முத்தமிழ்ப்பாசறை தலைவரும் மருத்துவருமான டாக்டர் மதியழகன் ஆகியோர் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியினை தமிழாசிரியர்கள் சு.மைதிலி, சி.லீலா ஆகியோர் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்தனர். முத்தமிழ்பாசறை செயலாளரும் பட்டிமன்ற நடுவருமான நெ.ரா.சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில்  அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள், முன்னாள் மாணவர் அமைப்பினர், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad