மணமேல்குடியில் மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 25 July 2023

மணமேல்குடியில் மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


மணமேல்குடியில் மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, இம்மருத்துவ முகாமினை மதிப்புக்குரிய மக்கள் மருத்துவர் திரு தெட்சிணாமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இம் மருத்துவ முகாமினை திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம், மணவை வணிகர்கள் கூட்டமைப்பு, மணமேல்குடி ஜெகதீஸ்வரர் திருமண மஹால் - முத்து மெடிக்கல் அமுதம் ஸ்டுடியோ மணமேல்குடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மணமேல்குடி,  போன்ற அமைப்புகளுடன் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.


முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ  நலன்களை பெற்றனர், இந்நிகழ்வில் திசைகள் அமைப்பு பொருளாளர் திரு முபாரக், திரு புகழேந்தி திரு ரியாஸ் அகமது மணமேல்குடி காவல்துறை ஆய்வாளர் திரு குணசேகரன் அவர்கள் மணவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு சாமியப்பன் செயலாளர் ரமேஷ் குமார் பொருளாளர் இந்தியன் கணேஷ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க  பொருளாளர் திரு திருமுகம் அவர்கள் மருத்துவர் திரு ராஜா முகமது அவர்கள் வணிகர் கூட்டமைப்பு துணைச்  தலைவர் ஹாஜாமுகைதீன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர் திரு ராஜமாணிக்கம் அவர்கள் CPM மணமேல்குடி ஒன்றிய செயலாளர் கரு.ராமநாதன், மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் மருத்துவ குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad