புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ராயவரம், பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை மழை பெய்தால் வெயிலில் தாக்கம் சற்று குறையும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து


திடீரென சூறைக்காற்றுடன் கனமழை தொடங்கியது மழையானது திருமயம், ராயவரம்,பொன்னமராவதி நற்சாந்துபட்டி, பனையப்பட்டி குழிப்பிறை கொப்பனாபட்டி ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment