புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பகவண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இன்நிலையில் இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்து வந்த பழைய நீர் தேக்க தொட்டி மிகவும் சிதளம் அடைந்ததாக கூறி புதிதாக அமைக்கப்பட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டின் JJM-P திட்டத்தின் கீழ் மாவட்ட ஊராட்சி நிதியின் சார்பாக சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் 60,000 குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சில நாட்களிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் குடிதண்ணீர் வீணாக கீழே கொட்டும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
சுமார் 11 லட்சம் மதிப்பிலான 60,000 லிட்டர் குடிநீர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தட்ட தொட்டியில் ஏற்பட்ட கசிவு அப்போது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


No comments:
Post a Comment