பொன்னமராவதி அருகே ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 19 July 2023

பொன்னமராவதி அருகே ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர்கள் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டுதர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர்கள் கோரிக்கை. ஒலியமங்கலத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துவுள்ளதை கண்டித்து திடீர் என பெற்றோர்கள் முற்றுகையிட்டு அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வேண்டும் என்றும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு சுற்று சுவர் கட்ட வேண்டும் என்றும் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் வருவாய் துறையினருக்கு மனு அளித்தனர்.


இதனையடுத்து அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை வருவாய் துறை சார்பில் இடத்தை அளந்து அத்து காண்பித்து கல் ஊன்றுமாறு கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கல் ஊன்ற விடாமல் தகராறில் ஈடுபட்டதால் காரையூர் காவல்துறையினர் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை உடன் படதாதல் பெற்றோர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இது குறித்து பெற்றோர்கள் பேசுகையில் இந்த அரசு நடுநிலைப்பள்ளியை சுற்றி சுற்று சுவர் எழுப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது. 


ஆனால் தனி நபர் ஆக்கிரமிப்பு உள்ளதால் சாலையின் அருகே உள்ள இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பின்றியும், விபத்து ஏற்பட அதிக வாயப்பு இருப்பதாவும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதை அகற்றி உடனடியாக சுற்று சுவர் எழுப்பி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொண்டு உள்ளனர்.


-எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad