திருமயம் அருகே நற்ச்சாந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 8 July 2023

திருமயம் அருகே நற்ச்சாந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.


திருமயம்  அருகே  நற்ச்சாந்துபட்டி  கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே  நற்ச்சாந்துபட்டி அமைந்துள்ள  ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த  வியாழக்கிழமை முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.


இதில் பிரசாத சுத்தி  கிரியைகள், வாஸ்து  ஹோமம், வாஸ்து பூஜை, கலச பூஜை, ரஷோத்தனகஹோமம், லட்சுமி பூஜை யாத்திரா தானம், மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாதாரனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.


இந்த யாக பூஜையில் பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட நீரானது கலசங்களில் நிரப்பி, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை, மேள தாளம் முழங்க  நம்பூதிரிகளால் தலையில் சுமந்து வரப்பட்டு, கோவிலை சுற்றி வந்தனர்.


அதனைத் தொடர்ந்து கருட பகவான் வட்டமிட, நம்பூதிரிகள் வேத மந்திரம் ஒத, பக்தர்களின்  சுவாமியே  சரணம்  ஐயப்பா !என்ற  கோஷத்துடன் விண்ணதிர கோபுர கலசத்தில் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி, மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏழாம் மன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad