மணமேல்குடி நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திருசெழியன் அவர்கள், திருமதி இந்திராணி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பள்ளியில் மாணவர்கள் காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை ஒரு மணி நேரம் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்கள் புத்தகங்களை வாசித்தனர்.


இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் திரு இளையராஜா மற்றும் திரு.திருமுருகன் ஆகியோர் செய்திருந்தார்கள்.
இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் அவர்கள் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகப்பிரியா மற்றும் ஜெனிட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இப்பள்ளியில் அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் புத்தக வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment