புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், உலக புகையிலை ஒழிப்பு தின பேரணி, இன்று (06/07/2023) பொது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியில் வலம்புரி வடுகநாதன் மேனிலைப் பள்ளி மாணவ மாணவியர் சுமார் 450 பேர்கள், ஊர்வலமாக பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு புகையிலை எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


இந்நிகழ்வில் பொன்னமராவதி மருத்துவ அலுவலர் மரு சிவகலை எம்பிபிஎஸ் பேரூராட்சி தலைவர் திருமதி சுந்தரி அழகப்பன் துணை தலைவர் திரு வெங்கடேஷ் தி.மு.க நகர செயலர் திரு அழகப்பன் வார்டு உறுப்பினர்கள் திரு திருஞானம் திரு ராஜா திரு நாகராஜன் திருமதி இஷாவிகாஸ் புதுக்கோட்டை மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் மரு சுகண்யா சோஷியல் பணிகள் பர்வீன் பானு சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் உத்தமன் ராமலிங்கம் முகேஷ் கண்ணா வசந்த் கண்ணன் பிரேம்குமார் மற்றும் பேரூராட்சி டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறை அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் பொன்னமராவதி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
-எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment