புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அறிவில் இயக்கம் இணைந்து புத்தகத் திருவிழா நடக்க உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று கண்டியாநத்தம் கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ நான் புதுக்கோட்டை வாசிக்கின்றேன் என்ற தலைப்பில் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்களது புத்தகங்களை வாசித்து அசத்தியுள்ளனர்.


இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் தலைமையில் மாணவ மாணவிகள் கையில் புத்தகம் ஏந்தி வாசித்தனர், மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கருணாகரன் பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment