புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற புத்தக திருவிழா நடத்தப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் புத்தகத்திருவிழா வரவேற்புக்குழு தலைவருமான ஐ.சா.மெர்சி ரம்யா அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதுமுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பிலான புத்தகத்திருவிழா பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் நடைபெற்றது.


புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற இப்புத்தக விழாவில் மாணவிகள் கையில் புத்தகம் ஏந்தி பாடங்களை வாசித்தனர். இதில் அப்பள்ளி ஆசிரியைகள் உடனிருந்து மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து உதவினர். அதேபோன்று வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் (பொறுப்பு) கணேசன் தலைமையிலும், பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மல்லீஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் கீதா சோலையப்பன் தலைமையிலும், கண்டியாநத்தம் ஊராட்சியில் தலைமையாசிரியர் சுபத்ரா, ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி முருகேசன் தலைமையிலும் மாணவ, மாணவிகள் கையில் புத்தகம் ஏந்தி வாசித்தனர்.
-எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment