ஒலியமங்கலம் ஊராட்சி சுந்தம்பட்டி, தொட்டியம்பட்டி ஊராட்சி தொட்டியம்பட்டி, பொன்னமராவதி பேரூராட்சி கொல்லங்காடு ஆகிய பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்நிலையில் ஒலியமங்கலம் ஊராட்சி சுந்தம்பட்டியில் ரூ 4,99,680/- மதிப்பீட்டில் புதிய மின் மாற்றியும், தொட்டியம்பட்டி ஊராட்சியில் ரூ 6,15,150/-மதிப்பீட்டிலும், பொன்னமராவதி பேரூராட்சி கொல்லங்காடு பகுதியில் ரூ4,28,530/- மதிப்பீடு செலவிலுல் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் குழந்தைசாமி, வட்டாட்சியர் பிரகாஷ், மண்டல துணை வட்டாட்சியர் சேகர், ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், செயற்பொறியாளர் ஆனந்தாய், உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி, உதவிப்பொறியாளர் அன்பானந்தம், சிறந்த ஆக்க முகவர் சேகர், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, நகரச் செயலாளர் அழகப்பன், ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் முருகேசன்,பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒலியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், தொட்டியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கீதா சோலையப்பன், துணைத்தலைவர் சாமிநாதன், வார்டு உறுப்பினர்கள், உதவிப்பொறியாளர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய பணியாளர்கள், மாவட்ட விளையாட்டு பிரிவு நிர்வாகி ஆலவயல் சாமிநாதன், இளைஞரணி இளையராஜா, திருமயம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலவயல் முரளிசுப்பையா மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment