செவலூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார் ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 1 July 2023

செவலூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார் ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியிலிருந்து  மலையடிப்பட்டிக்கு நான்கு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.செவலூர் ஊராட்சி மன்றத்தலைவர் திவ்யா முத்துக்குமாரிடன் செவலூரிலிருந்து மலையடிப்பட்டிக்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 


இந்நிலையில் செவலூர் ஊராட்சி மன்றத்தலைவர் திவ்யா முத்துக்குமார் இக்கோரிக்கை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனையடுத்து திவ்யா முத்துக்குமாரின் கோரிக்கையேற்று தமிழக அரசின் பொது நிதியிலிருந்து நான்கு கோடியே பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செவலூர்-மலையடிப்பட்டிக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணியினை ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி துவைக்கி வைத்தார். 


இந்நிகழ்வில் மாவட்ட கன்வுசிலர் குழிபிறை பாண்டியன்,மாவட்ட விளையாட்டு பிரிவு நிர்வாகி ஆலவயல் சாமிநாதன், செவலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கர்,வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad