புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி முத்தமிழ் பாசறை சார்பாக பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 90 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டி பாசறை பட்டயம் விருது வழங்கி சிறப்பித்தனர்.
கற்பித்த தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு தொல்காப்பியர் விருதும் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் முன்னதாக பாசறை 2023-2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிக்கு விருது வழங்கிம் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று வைத்தார்.
இந்நிகழ்வில் 320 மாணவ மாணவிகளுக்கு பாசறைபட்டயம் விருதுகளும் 60 தமிழ் ஆசிரிய அவர்களுக்கு தொல்காப்பியர் விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment