சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 2066 வது குருபூஜையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து சார்பில் அவரது மகன் பிகேவி.குமாரசாமி அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


இந்நிகழ்வில் அதிமுக பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி.கண்ணப்பன்,பொன்னமராவதி பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரன் , புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலவயல் சரவணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன், வர்த்தக அணி நிர்வாகி கல்லம்பட்டி கணேசன், மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சுந்தர்ராஜ், பேரூர் கழக பொருளாளர் காரிபழனியப்பன், அழகுமுத்துக்கோன் பேரவை பொன்னமராவதி ஒன்றிய தலைவர் சதீஷ், துணைத் தலைவர் நாகவேலு, பொன்னமராவதி அண்ணா தொழிற்சங்கம் தலைவர் ஆதிமுத்து, பொருளாளர் செந்தில்குமார், பிரதிநிதி சுப்பையா, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி,தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment