புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கராஜு வயது முதிர்வின் காரணமாக பிரியா விடை பெற்றார்.கடந்த 1989 ஆம் ஆண்டு விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய தங்கராஜு படிப்படியாக முன்னேறி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சிறப்பாக மக்கள் பணியாற்றி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையராக பணியாற்றி வந்தார்.


வயது முதிர்வின் காரணமாக இன்று பணி நிறைவு பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கராஜுக்கு ஊரக வளர்ச்சித்துறை உயர் அலுவலர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்து நிலை அலுவலர்கள், பணியாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு பணியாளர்கள், அனைத்துதுறை சார்ந்த அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள்,நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துகளை பரிமாறி நினைவுப் பரிசுகளை வழங்கி வெகுவாகப் பாராட்டி காரில் வழியனுப்பி வைத்தனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செதியாளர்.
No comments:
Post a Comment