பொன்னமராவதி வட்டாச்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 20 June 2023

பொன்னமராவதி வட்டாச்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் பசலி 1432 குடிகள் மாநாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொன்னமராவதி வட்டத்தில் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் வருவாய்த்தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட வருவாய் அலுவலர், ஜமாபந்தி அலுவலருமான மா.செல்வி  தலைமையில் தொடங்கியது.தொடக்கமாக 15-ஆம் தேதி காரையூர் உள்வட்டத்திலும்,16-ஆம் தேதி அரசமலை உள்வட்டத்திலும் இன்று 20-ஆம் தேதி பொன்னமராவதி உள்வட்ட கணக்குகள் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து ஜமாபந்தியின் நிறைவாக குடிகள் மாநாடு நடைபெற்றது.குடிகள் மாநாட்டிற்கு மாவட்ட வருவாய் அலுவலர், (ஜமாபந்தி) அலுவலருமான மா.செல்வி தலைமைவகித்து பேசுகையில் பொன்னமராவதியில் நடைபெற்ற ஜமாபந்தியில் அதிகப்படியான மனுக்கள் பெறப்பட்டதாகவும், பெறப்பட்ட மனுக்களுக்கு 20 நாட்களில் தீர்வு காணப்படும் என்று பேசினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர், (ஜமாபந்தி) அலுவலருமான மா.செல்வி பயனாளிகளுக்கு கணினிப் பெயர் திருத்தம்,உறவுமுறை திருத்தம், பட்டாமாறுதல் உத்தரவு, வீட்டுமனைப்பட்டா, அடங்கல் நகல், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜம்பந்தி அலுவலர் மா.செல்வி வழங்கினார். 

இந்நிகழ்வில் பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் துணை வட்டாட்சியர்கள் சேகர், திலகவதி, துணை ஆய்வாளர் ( நில அளவை ) கார்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலபதி, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், வேளாண் அலுவலர் முருகன், உதவி இயக்குநர் கலால் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவவலர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக மண்டல துணை வட்டாட்சியர் சேகர் அனைவரையும் வரவேற்றார். தனி வட்டாட்சியர் வெள்ளைச்சாமி நன்றியுரை வழங்கினார்.


- எம். மூர்த்தி, பி. காம் 

No comments:

Post a Comment

Post Top Ad