புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு கிராமத்தில் உலக யோகா தின விழிப்புணர்வு நடைபெற்றது. மேலைச்சிவபுரி ஆயுள் சுகாதாரம், மறுவாழ்வு மையம் சார்பில் வார்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட உலக யோகா தின விழிப்புணர்வு அரசு மருத்துவர் டாக்டர் பூபதி ராஜன் தலைமையில் சித்த மருத்துவர் சொர்ண சுகந்தி முன்னிலையில் தொடங்கியது.


இதில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி ஆசிரியர்கள் மணிவண்ணன், லதா ராஜா, சித்த மருத்துவர் சொர்ண சுகந்தி ஆகியோர் வார்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் போன்ற எல்லையற்ற திறனை அதிகரிக்கும் உடற்பயிற்சியினை வழங்கினர். இந்நிகழ்வில் வார்பட்டு அரசு ஆரம்பப்பள்ளில் ஆசிரியர்கள், தேவம்பட்டி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்கள், பொன்னமராவதி லயன் சங்கத்தின் முன்னாள் உடனடி தலைவர் லயன் பாஸ்கர், முன்னாள் தலைவர் லயன் தங்கப்பன்,செய்தி தொடர்பு அலுவலர் லயன் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோன்று கண்டியாநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முருகேசன் தலைமையில் பள்ளி மாணவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர்.
No comments:
Post a Comment