பொன்னமராவதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வருமா மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைதுறை? - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 8 June 2023

பொன்னமராவதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வருமா மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைதுறை?


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறையினருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. பொன்னமராவதியில் அதிகரித்து வரும் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் அவசரத்திற்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.


மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து நால் ரோடு வரையில் சிறிய அளவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு இருசக்கர வாகனம் நிறுத்த சாலையோரத்தில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டது.ஆனால் வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனத்தை நிறுத்த விடாமல் கடை,சில்லரை வியாபாரிகள் பேவர் பிளாக் கல்லில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்தும், கடையின் விளம்பர பலகையை சாலையில் வைத்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள், சரக்கு லாரிகள் வாகனங்களை ஆங்காங்கே ரோட்டில் நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பாக உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்,நெடுஞ்சாலைதுறையின் உயர்மட்ட குழுவினர் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம் போன்ற ஊர்களில் உள்ளது போல் பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து நால் ரோடு வரை சாலையின் நடுவே சிறிய அளவிலான தடுப்பு சுவர் அமைத்து போக ஒரு வழி, வர ஒரு வழியாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைதுறையினருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


அதேபோன்று நாட்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


-எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad