புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவிகள் மற்றும் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்பு.பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து முதல் நாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.பள்ளிக்கு திரும்பிய மாணவிகளை அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையிலான ஆசிரியர்கள் மாணவிகளுக்கு லட்டு, சாக்லேட் போன்ற இனிப்புகளை வழங்கி வரவேற்று மகிழ்ந்தனர்.


மேலும் அப்பள்ளியில் 99 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் எழுதுகோல் பரிசாக வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றிட உறுதுணையாக இருந்த அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, ஆசிரியர்கள் நாராயணி, நாகலட்சுமி, கவிதா, ஷர்மிளா, மீனாட்சி, சபீனா, வசந்தி, ஜரின், சுதா, ஹேமாமாலினி, மங்கை, கார்த்திகா, உஷாகனி, சுதா, ஜான்சி, பழனியம்மாள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு சமூக ஆர்வலர், புரவலர் மாணிக்கவேல் பொன்னாடை போர்த்திக் கெளரவுத்தார்.
இந்நிகழ்வில் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர், பெற்றோர்கள் உடனிருந்து ஆசிரியர்களை பாராட்டினர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment