

மேலும் அவசரத்திற்கு செல்லும் 108 வாகனம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதால் பொதுமக்கள், வானக ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குளாகி வருகின்றனர்.எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் சரவண சுந்தர் அவர்கள் நேரடியாக தலையிட்டு பொன்னமராவதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது பொன்னமராவதி போக்குவரத்து காவல் பணியில் ஒரு பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்கள் பணியாற்றி வரும் வேலையில் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் பணியில் இல்லாததால் ஓருசில நபர்கள்,சில கடை விற்பனையாளர்கள் போக்குவரத்து காவலர்களை பணி செய்யாவிட்டாமல் தடுக்கும் நிலை உருவாகி உள்ளது.
_எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment