புதுக்கோட்டை மாவட்டத்திலே பிறந்த குழந்தைகளின் பெயர்களைத் திருத்தம் செய்து அரசிழில் வெளியிடுவதற்காக புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தி அள்ள அரசு கிளை அச்சகத்திலேயே விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறுகையில் பெயர்களைத் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமானால், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம் சார்பில் சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் இது வரை விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் புதுக்கோட்டை மக்கள் திருச்சி சென்று வந்தனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் கால விரயத்தைத் தவிர்க்கும் வகையில் புதுக்கோட்டை கிளை அச்சகத்திலேயே விண்ணப்பிக்க வகை செய்யப்பட்டது. இந்த நடைமுறை கடந்த ஏப்ரல் முதல் அமலாகியுள்ளது. இ-சலான் மூலம் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment