புதுக்கோட்டை பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உருவாக்கிய தானியங்கி ரோபோ பலரையும் பெருமையடைய செய்துள்ளது. பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள அடல் டிங்கரிங் லேப் மூலம் பணிமனை (work shop) மூலம் 7ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம்,சுமை தூக்கும் ரோபோ, பாலோமி, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தது உள்ளனர்.


மேலும் பல்வேறு வடிவிலான ரோபோக்களை உருவாக்கிய மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர் நிர்மலா தலைமையிலான ஆசிரியர்கள், மாணவிகளை கெளரவிக்கும் வகையில் மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் புவனேஷ்வரி காளிதாஸ், பயிற்றுனர் ரகுமத்துல்லா, பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், காமராஜ் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டு ஆசிரியர்கள், மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment