

பொன்-புதுப்பட்டி பள்ளியில் பொது சுகாதாரத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வளரிளம் பருவத்தினர் சிறப்பு முகாமிற்கு மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகலை அவர்கள் தலைமை வகித்தார். முகாமில் மருத்துவர்கள் RBSK சார்பாக டாக்டர் சுகன்யா, பல் மருத்துவர் டாக்டர் லட்சுமி பிரியா மற்றும் கண் மருத்துவ உதவியாளர் ராஜேந்திரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு மோசஸ், மருந்தாளுநர் திரு. அசோகன் மற்றும் பகுதி சுகாதார செவிலியர் திருமதி ராஜேஸ்வரி மற்றும் செவிலியர்கள் ஆய்வக நுட்பணர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொது மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், ஆகிய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் திரு பா.தியாகராஜன் அவர்கள் சிறப்புடன் செய்திருந்தார். மேலும் மாணவர்களுக்கு நலக்கல்வி ஆலோசனை வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் நன்றியுரை தெரிவித்து முகாமை இனிதே நிறைவு செய்தார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment