

விராலிமலை வட்டத்தில் நில அளவராக பணியாற்றிய பாரதிராஜா ஆலங்குடி வட்டம் வல்லநாடு குறுவட்ட அளவராகவும், கந்தர்வக்கோட்டையில் பணியாற்றிய ராஜா கந்தர்வக்கோட்டை குறுவட்ட அளவராகவும், திருமயம் வட்டத்தில் நில அளவராகப் பணிபுரிந்த கார்த்திகேயன் திருமயம் குறுவட்ட அளவராகவும், ஆலங்குடி வட்டத்தில் பணியாற்றிய சத்யபிரியா கறம்பக்குடி குறுவட்ட அளவராகவும், விராலிமலை வட்டத்தில் பணியாற்றிய ராஜேஸ்வரி இலுப்பூர் குறுவட்ட அளவராகவும், இலுப்பூர் வட்டத்தில் பணியாற்றிய முருகேசன் காரையூர் குறுவட்ட அளவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும் புதிதாக பொறுப்பேற்ற ஆறு பேருக்கும் மாவட்ட உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) கண்ணன் பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டு, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment