உலக போதை பொருள் எதிர்ப்பு தினமானது 24.06.2023,முதல் 26.06.2023 வரை கடைபிடிக்கப்படுகிறது.அதன் அடிப்படையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆலோசனையின்படி பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெருமாள், காவலர் சார்லஸ், தனிப்பிரிவு காவலர் விஜய் ஆகியோர் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம், வீட்டிற்கும் நாட்டிற்கும் வளம் சேர்ப்போம் போன்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


அதே போன்று பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா முன்னிலையில் அப்பள்ளி மாணவிகளுக்கு காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பு புதிய வசதியான தனியாக பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறைவான நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய பாதுகாப்பு எண்கள் 1091, 112, பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098, பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க ஒவ்வொருவரும் பாடுபடுவோம் என ஆசிரியர்கள், மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டதுடன்.போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி செய்தனர். இப்பேரணியில் மது அருந்துதல்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாதீர், மதுப்பழக்கத்தை தவிர்ப்பீர், புத்துணர்ச்சி பெறுவீர், போதை இல்லா வாழ்க்கை அமைப்பீர்,வாழ்கையில் ஏற்றம் பெருவீர் போன்ற வாசகங்களை குரல் எழுப்பி பொன்-புதுப்பட்டியிலிருந்து பேரணியாக புதுவளவு, அண்ணாசாலை, நால்ரோடு, காந்திசிலை வழியாக பேருந்து நிலைய வளாகம் சென்று பேரணியை நிறைவு செய்தனர். இவ்விழிப்புணர்வு பேரணியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 90க்கு மேற்பட்ட மாணவிகள், அப்பள்ளி ஆசிரியர்கள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் சமுதாய கல்லூரி நிறுவனர் ரேவதி, வைகரை செந்தில், செவிலியர் பயிலும் மாணவிகள், காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் நிலைய காவலர் சார்லஸ் சிறப்பாகவும் பாதுகாப்புடனும் செய்திருந்தார் என்பது பாராட்டுக்கூறியது.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment